90 எம்.எல் டிரெய்லரை கிழி, கிழியென கிழித்து விமர்சனம்: ஓவியா ஆவேசம்

VM| Last Updated: திங்கள், 11 பிப்ரவரி 2019 (14:13 IST)
நடிகை ஓவியா கதை நாயகியாக நடித்துள்ள ’90 எம்.எல்.’ படத்தை அனிதா உதீப் இயக்கியுள்ளார்.

\


இந்தப் படத்துக்கு, சிம்பு இசையமைத்துள்ளார். தணிக்கைக் குழு ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளது.  18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பார்க்க வேண்டும் என்ற எச்சரிக்கையுடன் படக்குழு அண்மையில் 90 எம் .எல்.டிரெய்லர் வெளியிட்டது.
 
டபுள் மீனிங்  வசனங்கள், கவர்ச்சி நிறைந்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.  இந்த டிரெய்லரை பார்த்து தயாரிப்பாளர் தனஞ்செயன் கடுமையாக விமர்சித்தார்.
 
இது குறித்து டுவிட்டர் பக்கத்தில், “எனக்கு வருத்தமாகவும், கோபமாகவும் உள்ளது, பணத்துக்காக இதுபோல் இளைஞர்கள் இச்சை உணர்வைத் தூண்டும் படங்களை எடுக்கின்றனர். இதுபோன்ற மோசமான படங்கள் ஒழிய வேண்டும். இந்த டிரைலரை பார்த்து, நான் மிகவும் வருத்தமடைகிறேன்” என பதிவு செய்துள்ளார்.
 
இதுபோன்று பலரும் விமர்சனம் செய்ய, இதுப்பற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகை ஓவியா, “பழத்தை சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள். முழுப் படத்தையும் பார்க்கும் வரை காத்திருங்கள். டிரெய்லரைப் பார்த்து முழுப் படத்தையும் தீர்மானிக்காதீங்க” என்று பதிலளித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :