ஓவியாவை திட்டிக்கொண்டே ரசிகர்கள் செஞ்ச காரியம் #90ml

VM| Last Modified திங்கள், 11 பிப்ரவரி 2019 (11:19 IST)
ஆபாச படத்தில் நடித்திருப்பதாக ஓவியாவை திட்டிக்கொண்டே 45 லட்சத்துக்கும்  மேற்பட்டவர்கள் 90ml  டீசரை பார்த்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
இருட்டு அறையில் முரட்டு குத்து பாணியில் 90ml என்ற அடல்ட் காமெடி படத்தை பெண் இயக்குனர் அனிதா உதீப் இயக்கி உள்ளார். இதில் கதையின் நாயகியாக ஓவியா நடித்துள்ளார். ஆன்சன் பௌல் ஓவியாவுக்கு நடித்துள்ளார். அடுக்கு மாடி வீட்டில் வசிக்கும் பெண்கள் ஓவியா வருகைக்கு பின் தங்களது ஆசைகளை அனுபவிக்கிறார்கள். இதுதான் ஒருவரிகதை. பெண்கள் தங்கள் அடி மனது ஆசைகளை அனுபவிப்பதை படமாக எடுத்துள்ளதாக இயக்குனர் விளக்கம் கொடுத்து இருந்தார்.

ஓவியா நடிப்பில்  சிம்பு 90 ml, திரைப்படத்துக்கு இசையமைத்ததால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில் 90ml டீசர் படு ஆபாசமாக இருந்ததுடன் , பெண்கள் மது அருந்துவது மற்றும் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் இருந்ததால் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த படத்தில் நடித்ததுக்காக ஓவியாவை கடுமையாக திட்டி வருகிறார்கள். ஒரு குடும்ப குத்து விளக்காக நடிக்காமல் இப்படியா நடிப்பது என கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஒருபக்கம் எதிர்ப்பு இருந்தாலும் மறுபக்கம் ஆதரவும் 90ml  படத்துக்கு இருக்கிறது . திட்டிக்கொண்டே இந்த படத்தின் டிரெய்லரை 45 லட்சம் பேர் இதுவரை பார்த்துள்ளனர். சன்னி லியோன் நடித்த பாப்பீங்க, ஓவியா நடிச்சா பார்க்க மாட்டீங்களா என்று ரசிகர்கள் சிலர் ஓவியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். இதேபோல் ஓவியாவின் இந்த டிரெய்லரை  எதிர்க்கும் ரசிகர்கள் படம் தியேட்டருக்கு வந்தால் போகாமல் இருக்க மாட்டார்கள் என்றும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். 


இதில் மேலும் படிக்கவும் :