மாஸ் நடிகர்கள் படங்களுக்கு இணையாக ரிலீஸ் ஆகும் ஓவியாவின் '90ml'

Last Modified செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (18:18 IST)

ஓவியா நடிப்பில் இயக்குனர் அனிதா உதுப் இயக்கிய '90ml' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து சர்ச்சையான விமர்சனத்தை பெற்றது. ஓவியா ஆர்மியினர்களே நெளியும் அளவிற்கு படத்தில் அதிகபட்ச இரட்டை அர்த்த வசனங்கள் இருந்தது. இருப்பினும் இந்த வீடியோ யூடியூப் பார்வையாளர்களில் சாதனை செய்துள்ளது.
 
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 22ஆம் தேதி இந்த படம் வெளியாகவிருப்பதாகவும் முதல்முறையாக அதிகாலை ஐந்து மணி காட்சியும் திரையிடப்படவிருப்பதாகவும் ஓவியா தனது டுவிட்டர் பக்க்த்தில் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ஐந்து மணி காட்சியின்போது தான் ரசிகர்களை தியேட்டரில் சந்திக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.,
 
இதுவரை ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற மாஸ் நடிகர்களின் படங்கள் மட்டுமே அதிகாலை காட்சி திரையிடப்பட்ட நிலையில் தற்போது மாஸ் நடிகர்களுக்கு நிகராக ஓவியாவின் படமும் ஐந்து மணி காட்சி திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :