1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
  4. Lalu Prasad son applied for divorce within six months

ஆறே மாதத்தில் விவாகரத்து: லாலுபிரசாத் மகன் அதிரடி முடிவு

lalu prasad
கடந்த மே மாதம் முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜ்பிரதாப்புக்கும் ஆர்.ஜே.டி. எம்.எல்.ஏ. மகள் ஐஷ்வர்யாராய்க்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணம் நடந்து ஆறு மாதங்களே ஆகியுள்ள நிலையில் அதற்குள் இருவருக்கும் இடையே கசப்புணர்வு ஏற்பட்டதால் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜ்பிரதாப் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார்

தனது விருப்பத்தை மீறி இந்த திருமணம் நடந்துள்ளதாகவும், தனக்கும் நகரத்து பெண்மணியான ஐஸ்வர்யாராய்க்கும் ஒத்துவரவில்லை என்றும், இந்த கசப்பான உறவை மேலும் தொடர முடியாது என்பதால் விவாகரத்து முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அரசியல் உறவை வலுப்படுத்த லாலு பிரசாத் யாதவ், மகனின் விருப்பத்தை மீறி திருமணம் செய்ததாகவும், இதனால்தான் அவருடைய மகன் வாழ்வில் இத்தகையை நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 
அடுத்த கட்டுரையில்
2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அது கட்.... பாபா ராம்தேவ் சர்ச்சைக் கருத்து