செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By VM
Last Updated : புதன், 31 அக்டோபர் 2018 (11:18 IST)

முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கு டிச.12ல் திருமணம்!

ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் குழு தலைவர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிரேமலுக்கும் டிசம்பர் 12ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. மும்பைச் சேர்ந்த இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
 
இதில் முகேஷ் அம்பானியின் மகளான இஷா அம்பானியும், தொழிலதிபர் ஆனந்த் பிரேமலும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இருவரது பெற்றோரும் சம்மதித்தனர். 
 
இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 21ம் தேதி இஷா-ஆனந்த்  திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனையடுத்து, அம்பானியின் குடும்பத்தினர் கடந்த திங்களன்று மும்பையிலுள்ள பிரசித்த பெற்ற சித்தி விநாயகர் கோவிலுக்கு இஷா-ஆனந்தின் திருமண பத்திரிக்கையை  எடுத்து வந்து குடும்பத்தோடு சாமி கும்பிட்டு சென்றனர்.
 
இந்நிலையில், வரும் டிசம்பர் 12-ஆம் தேதி மும்பையில் இவர்களது திருமணம் நடக்கவுள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.