1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
  4. For Sivakarthikeyan film Silambam learned Samantha

சிவகார்த்திகேயன் படத்துக்காக சிலம்பம் கற்றுக்கொண்ட சமந்தா

சமந்தா
சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடித்துள்ள படத்துக்காக சிலம்பம் கற்றுக் கொண்டிருக்கிறார் சமந்தா. 
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் – பொன்ராம் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகிவரும் படம் ‘சீம ராஜா’. இந்தப் படத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.
 
சூரி, நெப்போலியன், சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கிறார். 24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படத்தின் ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்தில், பாவாடை – தாவணி அணிந்து முழுக்க முழுக்க கிராமத்துப் பெண்ணாக நடித்திருக்கிறார் சமந்தா. படம் முழுக்க பாவாடை – தாவணி அணிந்து இதுவரை அவர் நடித்ததே இல்லை. அதுமட்டுமின்றி, இந்தப் படத்துக்காக சிலம்பம் கற்றுக்கொண்டு நடித்திருக்கிறார் சமந்தா.