வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : சனி, 12 மே 2018 (18:41 IST)

“நான் திருமணமானவள் என்பதாலேயே அவதூறாகப் பேசுகிறார்கள்” – சமந்தா

‘நான் திருமணமானவள் என்பதாலேயே அவதூறாகப் பேசுகிறார்கள்’ என சமந்தா தெரிவித்துள்ளார். 
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. சமீபத்தில் இவர் நடித்து வெளியான ‘ரங்கஸ்தலம்’ தெலுங்குப் படம், சூப்பர்  ஹிட். அதுமட்டுமல்ல, ‘நடிகையர் திலகம்’ மற்றும் ‘இரும்புத்திரை’ என நேற்று ஒரே நாளில் அவருக்கு இரண்டு படங்கள் ரிலீஸாகியுள்ளன. ‘இரும்புத்திரை’யில் அவருடைய கேரக்டருக்கு கைதட்டல் எல்லாம் கிடைத்தது.
 
சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. பல வருடங்களாகக் காதலித்து, கடந்த வருடம் முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகும் சமந்தா கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவது  சர்ச்சையாகி இருக்கிறது.
 
இதுகுறித்து சமந்தாவிடம் கேட்டபோது, “பீச்சில் நீச்சல் உடையில் இருப்பது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்தால் நிச்சயம் என்னைப் பற்றித் தவறாகப் பேசுவார்கள். ஆனால், பீச்சில் புடவையா கட்ட முடியும்? மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக நான் அதைப் பகிரவில்லை.
ஆனால், ‘நீ இதைத்தான் பகிரணும்’ என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. நான் திருமணமானவள் என்பதாலேயே அவதூறாகப் பேசுகிறார்கள். என்  வாழ்க்கையை எப்படி வாழ வேண்டுமென யாரும் எனக்கு சொல்லத் தேவையில்லை. நான் பயப்படவும் இல்லை, இந்தப் பிரச்னைக்குள் சிக்கவும்  விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.