1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 9 மே 2018 (12:46 IST)

விஷாலின் 'இரும்புத்திரை': முதல் பாதி எப்படி உள்ளது?

இந்தியாவில் முதல் முயற்சியாக ஒரு திரைப்படத்தின் முதல் பாதி மட்டும் பத்திரிகையாளர் காட்சியாக இன்று இரும்புத்திரை சென்னையில் திரையிடப்பட்டுள்ளது. இந்த வழக்கம் ஹாலிவுட்டில் பலவருடங்களாக நடந்து வருகிறது என்றாலும் விஷால் முதல்முறையாக இந்தியாவில் இதனை அறிமுகம் செய்துள்ளார். வரும் வெள்ளியன்று வெளியாகும் இந்த படத்தின் முதல் பாதி விமர்சனத்தை தற்போது பார்ப்போம்
 
கருப்புப்பணம், ஊழல் பணம், மோசடி பணம் ஆகியவற்றை குறிவைத்து அவர்களுடைய வங்கி கணக்கில் இருந்து பணத்தை கொள்ளையடிக்கின்றது ஒரு கும்பல். இதனால் அப்பாவிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த கும்பல் விஷாலிடமும் தனது கைவரிசையை காண்பிக்க, அந்த கும்பலால் பத்து லட்ச ரூபாயை இழந்த விஷால், கும்பலை பிடிக்க களமிறங்குகிறார். அர்ஜூன் தலைமையினான அந்த இண்டர்நெட் குற்றவாளிகளை விஷால் எப்படி பிடித்தார் என்பதுதான் இரண்டாம் பாதி.
 
நேர்மையான ராணுவ வீரர் கேரக்டருக்கு விஷால் கச்சிதமாக பொருந்துகிறார். அநியாயங்களை கண்டால் பொங்குவது, ரோபோ சங்கருடன் சேர்ந்து கூத்தடிப்பது, டாக்டர் சமந்தாவிடம் ரொமான்ஸ் செய்வது என கலகலப்பான நடிப்பை தந்துள்ளார் விஷால்
 
விஷாலின் கோபத்தை குறைத்து நார்மலாக்க வேண்டும் என்பது சமந்தாவின் வேலை. அந்த வேலையை அவர் சரியாக செய்துள்ளார். மற்ற படங்களை போல் அல்லாமல் அமைதியான, வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சமந்தா.
 
ரோபோ சங்கரின் காமெடியில் ஆங்காங்கே இரட்டை அர்த்தமும் உள்ளது. டெல்லி கணேஷ் விஷாலின் அப்பா கேரக்டரில் நடித்துள்ளார். மகனிடம் திட்டு வாங்கும் அப்பாவி கேரக்டரில் இந்த அப்பாவின் நடிப்பு ஓகே
 
இடைவேளைக்கு ஒருசில நிமிடங்கள் முன்னர்தான் ஆக்சன் கிங் அர்ஜூன் அறிமுகமாகிறார். இவருடைய கேரக்டருக்கு இரண்டாம் பாதியில் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும் என்பது தெரிகிறது. முதல் பாதியின் இரண்டு பாடல்கள் ஓகே ரகம். யுவனின் பின்னணி இசை சூப்பர். ஜார்ஜ் வில்லியம்ஸ் கேமிரா மற்றும் ரூபனின் படத்தொகுப்பில் அவர்களுடைய உழைப்பு தெரிகிறது. விஷால், அர்ஜுன் மோதும் இரண்டாவது பாதி ஓகே என்றால் ஒரு வெற்றிப்படம் உறுதி.