புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: சனி, 9 மார்ச் 2019 (21:24 IST)

அதிமுக கூட்டணியில் இணைகிறது தேமுதிக! 4 தொகுதிகள் என தகவல்

அதிமுக குறித்தும், ஜெயலலிதா குறித்தும் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது தேமுதிக பொருளாளர் பிரேமலதா விமர்சனம் செய்ததால், தேமுதிகவை அதிமுக தனது கூட்டணியில் சேர்க்காது என்றே கருதப்பட்டது.
 
ஆனால் திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணியில் இணையவுள்ளதாகவும், அக்கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும் சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது. தே.மு.தி.க.வுக்கு வடசென்னை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விருதுநகர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
முன்னதாக அதிமுகவில் கூட்டணி கதவுகள் அடைக்கப்பட மாட்டாது என்றும் இக்கூட்டணிக்கு வருபவர்களுக்கு மரியாதை செய்வோம்  என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார். அதேபோல் அதிமுக ஆட்சி யாருடைய தயவிலும் ஆட்சி இல்லை என்றும் தங்களால் தான் இந்த ஆட்சி நீடிக்கிறது என்று கூற யாருக்கும் உரிமையில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
அதிமுகவையும் ஜெயலலிதாவையும் விமர்சனம் செய்த தேமுதிகவை அதிமுக ஏன் கூட்டணியில் சேர்த்து கொண்டது என தமிழக மக்களின் மனதில் எழும் கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்