வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 9 மார்ச் 2019 (19:22 IST)

தேமுதிகவை பிரேமலதா பாதாளத்தில் தள்ளிவிட்டார்: இளவரசி மகள் ஆதங்கம்

விஜயகாந்த் தனது ரசிகர்களை அரவணைத்து அரசியல் கட்சி தொடங்கி கடந்த 14 ஆண்டுகளாக கட்டிக்காத்த தேமுதிக என்ற கட்சியில் ஒரே ஒரு பிரஸ்மீட்டில் அதள பாதாளத்திற்கு தள்ளிய பெருமை அவருடைய மனைவியும் கட்சியின் பொருளாளருமான பிரேமலதாவையே சேரும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி சசிகலாவுடன் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா தன்னுடைய சமூக வலைத்தளத்தில், '2006 முதல் தேமுதிக, விஜயகாந்தால் அடைந்த உயரத்தின் அடையாளங்கள் எல்லாம், அழிக்கப்பட்டு, அதல பாதாளம் செல்லக் கூடிய அறிகுறிகளெல்லாம் அருமையாக தென்படுகிறது. அவ்வாறான ஒரு நிலைக்கு அக்ட்சியை தள்ளியதில் சமபங்கு வகிக்கிறார்கள் பிரேமலதாவும், சுதீசும்' என்று தெரிவித்துள்ளார்.
 
இனி தேமுதிக கிட்டத்தட்ட அழிந்துவிட்டதாகவும், வரும் தேர்தலில் அந்த கட்சி கூட்டணியில் போட்டியிட்டாலும், தனித்து போட்டியிட்டாலும் 40 தொகுதிகளிலும் டெபாசிட்டை இழக்கும் என்றும் அக்கட்சியின் தொண்டர்களே வருத்தத்துடன் கூறி வருகின்றனர்.