வைகோ இருந்த கூட்டணி இதுவரை வெற்றி பெற்றதுண்டா? தமிழிசை கிண்டல்

Last Modified சனி, 9 மார்ச் 2019 (18:43 IST)
இதுவரை வைகோவின் மதிமுக இருந்த கூட்டணி வெற்றி பெற்றதுண்டா? என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கிண்டலடித்துள்ளார்.
திமுக கூட்டணியில் ஒரே ஒரு தொகுதி மட்டுமே மதிமுகவுக்கு தரமுடியும் என முக ஸ்டாலின் கூறியதும் வைகோ அதனை ஏற்காமல் கூட்டணியில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு தொகுதிக்கு ஒப்புக்கொண்டது மட்டுமின்றி திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும் வைகோ ஒப்புக்கொண்டது அவரது கட்சி தொண்டர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் வைகோவின் இந்த நிலை குறித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தமிழிசை, 'வைகோ இடம்பெற்ற கூட்டணி என்றாவது வெற்றி பெற்றதுண்டா? என பதில் கேள்வி எழுப்பினார். இதனை மனதில் வைத்துதான் மதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற்ற ஒரு தொகுதியை மட்டும் மதிமுகவுக்கு கொடுப்பதாக ஸ்டாலின் கூறியதாகவும் அதனையும் ஒப்புக்கொண்டு கூட்டணிக்கு வைகோ ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
ஆனால் கடந்த 2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் தான் வைகோவின் மதிமுக இருந்தது என்பதும், அந்த கூட்டணி தமிழகத்தில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றிருந்தாலும் மத்தியில் ஆட்சியை பிடித்தது என்பதும்
குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :