திங்கள், 29 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : சனி, 2 ஜூன் 2018 (12:02 IST)

ரஜினிகாந்தை கார்ப்ரேட் நிறுவனங்கள் இயக்குகின்றன - சரத்குமார்

ரஜினிகாந்தை கார்ப்ரேட் நிறுவனங்கள் இயக்குகின்றன - சரத்குமார்
ரஜினிகாந்தை கார்ப்ரேட் நிறுவனங்கள் இயக்குகின்றன என்று சரத்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
 
போராட்டக்காரர்களிடையே சமூக விரோதிகள் ஊடுருவி போலீசை தாக்கியதால் தான் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததாகவும், அந்த சமூக விரோதிகளை அடையாளம் கண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  தூத்துகுடிக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் கூறினார். 
 
மேலும் எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும் என்றும் வேலை வாய்ப்புகள் பாதிக்கும் என ரஜினி ஆவேசமாக கூறினார்.
ரஜினிகாந்தை கார்ப்ரேட் நிறுவனங்கள் இயக்குகின்றன - சரத்குமார்
இந்நிலையில் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை, சந்தித்த பின் பேசிய சரத்குமார் வன்முறை எண்ணம் இருந்திருந்தால் குடும்பத்தோடு, குழந்தை-குட்டிகளோடு பொதுமக்கள் போராட்டத்திற்கு வந்திருப்பார்களா?
 
உரிமைக்காக போராடியவர்கள் சமூக விரோதிகள் என்றால் காவிரிக்காக போராடியவர்கள் சமூக விரோதிகளா? போராட்டத்தால் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் என ரஜினி கூறியிருப்பதன் மூலம் அவரை கார்ப்பரேட் நிறுவனங்கள் இயக்குகின்றன என்பது தெளிவாகிறது என ரஜினியை ஆவேசமாக தாக்கி பேசினார் சரத்குமார்.