வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 1 ஜூன் 2018 (20:59 IST)

ரஜினிக்கு ஆதரவான கருத்தா? விஜய்சேதுபதி விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் போராட்டம் குறித்தும் சமூக விரோதிகள் குறித்தும் கூறிய கருத்துக்கள் குறித்து பலரும் பல்வேறு வகையில் விமர்சனம் செய்து வருகையில் ரஜினியின் இந்த கருத்துக்கு நடிகர் விஜய்சேதுபதி தனது டுவிட்டரில் ரஜினிக்கு ஆதரவான கருத்து ஒன்றை முன்வைத்ததை போன்று பதிவு செய்யப்பட்டது.
 
இந்த நிலையில் நடிகர் விஜய்சேதுபதி இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: டுவிட்டரில் நான் கூறியதாக நிறைய தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. அந்த கருத்துக்கள் என்னுடைய பெயரில் இயங்கும் போலிகளின் செயல் என்று தெரிவித்துக் கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.
 
முன்னதாக விஜய்சேதுபதி பெயரில் இயங்கும் போலி டுவிட்டர் பக்கங்களில், 'தமிழ்நாட்டுக்கு யாராவது வந்து நல்லது செய்யட்டும் என்கிற எண்ணத்தை விட.. ரஜினியால் நல்லது எதுவும் நடந்து விடக்கூடாதே என்கிற பதட்டம்தான் இங்கு நிறைய பேருக்கு. என்று கூறியிருந்ததாக செய்தி பரப்பப்பட்டது
 
மேலும் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.