திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 1 ஜூன் 2018 (11:38 IST)

ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பில் தீ: நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி கைது

தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த 100வது நாள் போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. இதனால் கலவரம் செய்தவர்களை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த கலவரத்தின்போது ஸ்டெர்லைட் ஆலையின் ஊழியர் குடியிருப்புக்கு தீ வைக்கப்பட்டது.
 
இந்த நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் போலீசார், தற்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு தீ வைத்த  வழக்கில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வினயரசு என்பவரை கைது செய்துள்ளனர்
 
ஸ்டெர்லைட், போராட்டத்தின் போது, ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்பில் இருந்த வாகனங்களுக்கு தீ வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு கைது செய்யப்பட்டதாகவும், அவரை கைது செய்த சிப்காட் போலீஸார் அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.