தொடர்புடைய செய்திகள்
- அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்? கசிந்த தகவல்
- நாளை பட்ஜெட் தாக்கல்: தமிழகம் என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்...?
- பாஜக - அதிமுக கூட்டணி ரிஜெக்ட்? பொன்னையன் அதிரடி
- மண்ணை கவ்வும் அதிமுக; திமுகவிற்கு மாபெரும் வெற்றி: டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு
- அடல்ட் ஆண்களுக்கு அது ஃப்ரீ; ராகுலுக்கு எதிராக ட்விட் போட்டு மாட்டிய பாஜக ஆதரவாளர்
அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்? கசிந்த தகவல்
கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிமுக தலைமை ஏற்கனவே குழு அமைத்துள்ள நிலையில் அந்த குழு பல்வேறு கட்சிகளிடம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், கூட்டணியில் எந்தெந்த கட்சிகள், எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என கிட்டத்தட்ட முடிவாகிவிட்டதாகவும் அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகம், புதுவை என மொத்தமுள்ள 40 தொகுதிகளில் அதிமுக 20, பாஜக 10, பாமக 5, தேமுதிக 4 , புதிய தமிழகம்1 என்கிற அளவில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதனையடுத்து எந்தெந்த தொகுதிகள் எந்த கட்சிகளுக்கு என்பது குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் ஆலோசனை செய்யப்படும் என தெரிகிறது. மேலும் பாஜகவுடன் கூட்டணி வைக்க தம்பித்துரை எம்பி உள்ளிட்ட ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் நடந்து வருவதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த கட்டுரையில்
