அடல்ட் ஆண்களுக்கு அது ஃப்ரீ; ராகுலுக்கு எதிராக ட்விட் போட்டு மாட்டிய பாஜக ஆதரவாளர்
பிரதமர் மோடியின் ஆதரவாளரும், எழுத்தாளருமான மது பூர்ணிமா கிஷ்வார் என்பவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை முக மோசமாக விமர்சித்து இருப்பது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு தினங்களுக்கு முன்னர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானத்துக்கான உத்தரவாதத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இதன் மூலம் வறுமையையும் பசியையும் ஒழிக்க முடியும். இதுவே எங்களது பார்வை மற்றும் வாக்குறுதியாகும் என டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
ராகுலின் இந்த டிவிட்டை பலர் வரவேற்றாலும், பாஜக தரப்பில் இருந்து விமர்சனங்கள் வந்துக்கொண்டிருந்துதான் இருந்தது. தற்போது மது பூர்ணிமா கிஷ்வார் இதனை விமர்சிக்கும் வகையில் போட்டுள்ள ட்விட் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, பொறுத்திருங்கள் மக்களே! ஆண்டுதோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இலவச செக்ஸும் தருவோம் என ராகுல் காந்தி வாக்குறுதி கொடுத்தாலும் கொடுப்பார் என குறிப்பிட்டுள்ளார்.
இதனால், காங்கிரஸ் ஆதரவாளர்கள் இவரை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். சில இணையவாசிகளும் இவருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறனர்.