செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 30 அக்டோபர் 2021 (14:01 IST)

ரோஜா சீரியல் நடிகைக்கு கொரோனா: மூச்சு திணறறால் அவதி?

ரோஜா சீரியலில் அனு கேரக்டரில் நடித்து வருபவர் விஜே அக்ஷராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் அனு கேரக்டரில் நடித்து வருபவர் விஜே அக்ஷரா.  இதற்கு முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் ஷாமிலி சுகுமார் நடித்தார். அவர் கர்ப்பமாக இருப்பதன் காரணமாக இந்த சீரியலில் இருந்து விலகிக்கொண்டார். 
 
இதனிடையே அக்ஷராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தெரிவித்ததாவது, எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் எனக்கு மூச்சு விட சற்று சிரமமாக இருந்தது. அதனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், தேவையான மருத்துவ உதவியுடன் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டேன். இப்போது சற்று நன்றாக உணர்கிறேன் என தெரிவித்துள்ளார்.