வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 6 அக்டோபர் 2023 (12:10 IST)

என்ன முடிஞ்சா செருப்பால அடிடா.. ஊர் போய் சேர மாட்ட! – அடிதடியில் இறங்கும் பிக்பாஸ் ஹவுஸ்!

Bigg Boss
பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே ப்ரதீப்புக்கு பலருடன் பிரச்சனை இருக்கும் நிலையில் தற்போது அடி தடி பிரச்சனை ஆகும் அளவிற்கு வாக்குவாதம் நடந்துள்ளது.


 
விஜய் டிவியில் தொடங்கி நடந்துவரும் பிக்பாஸ் தொடரின் ஏழாவது சீசன் தொடங்கிய சில நாட்களிலேயே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. இதில் பிரதீப் தொடர்ந்து பல ஹவுஸ்மேட்ஸ்களிடம் பிரச்சனையில் ஈடுபட்டு வருகிறார். அவர் அனைத்தையுமே ஒரு கேம் டாஸ்க்காக மட்டுமே பார்க்கிறார். தற்போது ஹவுஸின் தலைவராக உள்ள விஜய்க்கும் பிரதீப்க்கும் அடிக்கடி சண்டை நடந்து வருகிறது.

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் விஜய் தன்னை பிரதீப் இடித்துவிட்டு சென்றதாக குற்றம் சாட்டியுள்ளார். “என்னை இடிச்சிட்டு போனா திரும்பி கையை நீட்டி ஒரு குத்துவிட எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்? என்ன இங்க என்ன வேணாலும் பண்ணலாம்.. ஆனா என்ன புடிச்சவங்க நிறைய பேரு வெளிய இருக்காங்க.. அவங்க கிட்ட மாட்டிங்கனா நீங்க அவ்ளோதான்” என பிரதிப்பையும் மிரட்டும் தோனியில் விஜய் பேச அந்த சமயம் விஷ்ணு, விஜய்க்கு எதிராக பேசத் தொடங்கினார்.

அதற்கு விஜய் ” உன்னால முடிஞ்சா என் மேல கை வைடா” என்று கூற, அதற்கு விஷ்ணு “உன்னை செருப்பால அடிச்சா நீ என்ன பண்ணுவ?” எனக் கேட்டார். அதற்கு ”உன்னால முடிஞ்சா என்ன செருப்பால அடிச்சிபாரு” என விஜய் ஒரு பக்கம் எகிற பிக்பாஸ் வீடு ஒரு ரணகளத்திற்கு தயாரானதுபோல் இருக்கிறது.

இதற்கு நடுவே பிரதீப் ”நான் உன்னை மட்டும் இல்ல இங்க உள்ள எல்லாரையும் அடிக்கத்தான் போறேன்” என்று பேச அது மாயாவை டிரிக்கர் செய்துவிட்டது. இதனால் மாயா பிரதீப்பிடம் வாக்குவாதத்தில் ஈடுபட அதற்கு பிரதீப் விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ”போயா யோவ்” என்று கூறிவிட்டு மாயா சென்றுவிட்டார். தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ் இடையே நடைபெறும் இந்த வாக்குவாதங்கள் சண்டையில் போய் முடியுமோ என்ற பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K