வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (17:15 IST)

பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்ற ரோபோ சங்கர்

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர். இவர் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக தகவல் வெளியாகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக இருந்த ரோபோ சங்கர் தன் திறமையின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

அதன்பின்னர், கலக்கப்போவது யாரு  உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர், மாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்ட அவர்  சிகிச்சைக்குப் பின் குணமடைந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்த நிலையி, சென்னை  பிரசாத் லேபில் நடைபெற்ற கும்பாரி பட வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார் ரோபோ சங்கர்.  நிகழ்ச்சி முடிந்து அவரது மனைவி பிரியங்கா ஸ்கூட்டியில் ஹெல்மெட் அணியாமல் செல்ல…மற்றொரு பைக்கில் ரோபோ சங்கரும், அந்த பைக்கை ஓட்டி  நபரும் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக தகவல் வெளியாகிறது.