ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (20:18 IST)

கவினின் புதிய பட தலைப்பு அறிவிப்பு

kavin -star
கவின் நடிப்பில் உருவாகி வரும்  புதிய  படத்திற்கு ‘ஸ்டார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

டிவி சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் கவின். அதன்பின்னர்.  நட்புன்னா என்னன்னு தெரியுமா? படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். பின், லிப்ட் படத்தில் நடித்தார்.

சமீபத்தில் இவர் நடிப்பில்  கணேஷ் பாபு இயக்கத்தில் வெளியான படம் ‘டாடா’. இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.20 கோடிக்கு மேல் வசூலானது.

இந்த நிலையில் தன் காதலியான மோனிகாவை கவின் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

ஏற்கனவே 2 புதிய படங்களில் நடித்து வந்த கவின், இன்று தன் புதிய பட டைட்டிலை அறிவித்துள்ளார். அதன்படி, அவரது அடுத்த படத்திற்கு ‘ஸ்டார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இப்படத்தை இலான் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ரெய்ஸ் ஈஸ்ட் எண்டர்டெயிண்மென்ட் தயாரிக்கவுள்ளது. இப்பட புரொமோ வீடியோ ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து அவர் தன் சமூகவலைதள பக்கத்தில், 

‘’வயது முதிர்ந்த போதிலும்..
வலிகள் மிகுந்த போதிலும்..
வலிமை குறைந்த போதிலும்..

வீரன் வாள் தரிப்பதை நிறுத்துவதில்லை!’’என்று பதிவிட்டு, ஸ்டார் பட டைட்டில் லுக் போஸ்டரை பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகிறது.