1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
Written By
Last Updated : புதன், 17 மார்ச் 2021 (12:32 IST)

பாஜக கூட்டணியில் பிளவு… புதுச்சேரியில் பாமக தனித்துப் போட்டி!

புதுச்சேரி கூட்டணியில் சீட் ஒதுக்குவதில் கருத்து வேறுபாடு எழுந்த நிலையில் பாமக தனித்து 15 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. ஆனால் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு இல்லாததால் இப்போது பாமக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. 15 தொகுதிகளில் போட்டியிடும் பாமக முதல்கட்டமாக 9 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.