வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 16 மார்ச் 2021 (20:06 IST)

பாமக வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடும் அதிமுக நிர்வாகி

பாமக வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடும் அதிமுக நிர்வாகி
அதிமுக கூட்டணியின் இடம் பெற்றுள்ள பாமகா வேட்பாளரை எதிர்த்து அதிமுக நிர்வாகி ஒருவர் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது 
 
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு சமீபத்தில் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன என்பதும் அந்த தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பாமக தலைவர் ராமதாஸ் அறிவித்துள்ளார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவின் ஒன்றிய மகளிரணி செயலாளர் லட்சுமி என்பவர் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்கிறார் 
 
அவரை சமாதானப்படுத்த அதிமுக தலைமை முயற்சித்து வருவதாகவும் அதையும் மீறி அவர் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டால் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன