புதுச்சேரி காங்கிரஸிலும் மோதல்; திமுக காரணமா?
புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சியினர்குள்ளேயே மோதல் எழுந்துள்ளது சர்ச்சையை ஏற்படுதியுள்ளது.
புதுச்சேரி சட்டமன்ற தொகுதி தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் புதுச்சேரியில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் – திமுக இடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்நிலையில் இன்று புதுச்சேரி தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் நடத்திய ஆலோசனை கூட்டத்தொடரில் மோதல் வெடித்துள்ளது.
திமுகவிற்கு அதிக தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், புதுச்சேரியில் காங்கிரஸ் தனது பெரும்பான்மையை மீட்க தனிப்பெரும்பான்மை தொகுதிகளில் போட்டியிட வேண்டும் எனவும் சிலர் பேசியதாக கூறப்படுகிறது. இதனிடையே இதுகுறித்து இருசாரார் இடையே நிலவிய கருத்து வேறுபாடு மோதலாக வெடித்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.
முன்னதாக தமிழக காங்கிரஸிலும் கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியிலும் இவ்வாறு காங்கிரஸினர் பிரச்சினை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.