மீனம்: தை மாத ராசி பலன்கள் 2020

Meenam
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) - கிரகநிலை: சுக ஸ்தானத்தில் ராஹூ -  ரண, ருண  ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய  ஸ்தானத்தில்  செவ்வாய் - தொழில்  ஸ்தானத்தில்  குரு, சனி, கேது - லாப ஸ்தானத்தில்  சூர்யன், புதன் - அயன, சயன,  போக  ஸ்தானத்தில் சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றங்கள்:
 
28-01-2020 அன்று மாலை 3.12 மணிக்கு புதன் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
04-02-2020 அன்று மாலை 6.36 மணிக்கு சுக்கிர பகவான் ராசிக்கு மாறுகிறார். 
10-02-2020 அன்று காலை 5.13 மணிக்கு  செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
 
அனைவரிடமும் நட்புடன் பழகும் மீன ராசியினரே, இந்த மாதம் எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். எல்லாவற்றிலும் நெருக்கடி நிலை காணப்படும். சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மன நிறைவை அடைவீர்கள். எதிர்பாலினரிடம் பழகும் போது  கவனம் தேவை. 
 
குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.  தம்பதிகளிடையே  விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்காலத்திற்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள்.  உடல்நலத்தில் எந்தவித பாதிப்பும் இருக்காது. ஏற்கனவே இருக்கும் நோய்களில் இருந்தும் முன்னேற்றம் இருக்கும்.
 
தொழில், வியாபாரம் முன்னேற்றப்பாதையில் செல்லும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர்கள் கிடைப்பதில் இருந்த  தாமதம் இப்போது விலகும்.
 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். வேலை மாறுதல் பற்றிய எண்ணம் உண்டாகும். 
 
கலைத்துறையினருக்கு தொழிலில் பிரச்சனைகள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் நிதானத்துடன் நடந்து  கொண்டால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும்  வாய்ப்புகள் உண்டு.
 
அரசியல்துறையினருக்கு மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். தொகுதி வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.
 
பெண்களுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியம் நன்கு நடந்து  முடியும். மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து கல்வியில் வெற்றி பெற நன்கு படிப்பீர்கள்.
 
பூரட்டாதி 4ம் பாதம்:
 
இந்த மாதம் சாமர்த்தியமாக செயல்பட்டு எதிலும் வெற்றிபெறுவீர்கள். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கலாம். ஆடை, அலங்கார பொருட்கள் வாங்கும் எண்ணம் தோன்றும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடு  செய்யும் முன் யோசிப்பது நல்லது. கடன் விஷயங்களில் கவனம்  தேவை.
 
உத்திரட்டாதி:
 
இந்த மாதம் பணவரத்து கூடும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை  ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது.
 
ரேவதி:
 
இந்த மாதம் எதிர்பார்த்த பணம் கைக்கு வந்துசேரும். திருப்திகரமான லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக  செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப்பெறுவார்கள். அத்துடன் பணம் வரத்தும் திருப்திகரமாக இருக்கும். கடினமான பணிகளை  கூட எளிதாக முடிக்கும் ஆற்றல் வரும். வாகனங்களில் செல்லும் போதும், நெடுந்தூர பயணங்களின் போதும் கவனமாக இருப்பது நல்லது.
 
பரிகாரம்: வியாழக்கிழமையில் நவக்கிரகங்களை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். 
 
அதிர்ஷ்டகிழமைகள்: ஞாயிறு - புதன்
சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 18, 19
அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ரவரி 8, 9.


இதில் மேலும் படிக்கவும் :