செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By

மகரம்: தை மாத ராசி பலன்கள் 2020

(உத்திராடம் 2, 3, 4 பாதம்,  திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) - கிரகநிலை: ராசியில்  சூர்யன், புதன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - ரண, ருண  ஸ்தானத்தில்  ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய் -  அயன, சயன,  போக  ஸ்தானத்தில்  குரு,  சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றங்கள்:
 
28-01-2020 அன்று மாலை 3.12 மணிக்கு புதன் பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
04-02-2020 அன்று மாலை 6.36 மணிக்கு சுக்கிர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
10-02-2020 அன்று காலை 5.13 மணிக்கு  செவ்வாய் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
 
தெளிவான சிந்தனை இருந்தும் முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மகர ராசியினரே இந்த மாதம் உங்கள் திறமையை கண்டு மற்றவர்கள் பாராட்டுவார்கள். திட்டமிட்டு செயலாற்றுவதில் பின்னடைவு ஏற்படலாம். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன்  சில்லறை சண்டைகள் உண்டாகலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். தடைபட்ட புதிய கடன்கள் இனி ஏற்படாது. இருக்கும் கடன்  சுமையும் குறையும்.
 
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பொருள் வரவு அதிகரிக்கும். தம்பதிகளிடையே  நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை சேரும்.  உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும்.  
 
தொழில் வியாபாரம் தொடர்பாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கும். உங்களுக்கு வர வேண்டிய பணம் தாமதமில்லாமல் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உண்டு. மேல் அதிகாரிகள் கூறிய படி காரியங்களை செய்து முடித்து  பாராட்டு பெறுவீர்கள். 
 
கலைத் துறையினர் எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். 
 
அரசியல்துறையினர் மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். சக நண்பர்கள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். மேலிடத்தின் கருத்துக்களை நீங்களே முன்னின்று கேட்டு செய்வதன் மூலம் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
 
பெண்களுக்கு பண தேவை அதிகரிக்கும். எதிலும் உடனடியாக முடிவு எடுக்க வேண்டாம். தீர ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. வேலை பளு அதிகரிக்கும். உடல்நலம் சீராக இருக்கும். உடலில் அதிக உஷ்ணம் வராமல் பார்த்துக் கொள்வது அவசியம். மாணவர்களுக்கு அதிக நேரம்  பாடங்களை படித்து கவனத்தில் வைத்துக் கொள்வது நல்லது.
 
உத்திராடம் 2, 3, 4 பாதம்:
 
இந்த மாதம் தொல்லைகள் குறையும். வீண் செலவுகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கு  கல்வியில் மெத்தன போக்கு ஏற்படாமல் தீவிர கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு வழி வகுக்கும். பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடும் முயற்சிகள் பலன் தரும். செலவு அதிகரிக்கும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும்.
 
திருவோணம்:
 
இந்த மாதம் காரியத்தடை நீங்கும். இனிமையான பேச்சின் மூலம் சிக்கலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள்  திறமையை கண்டு அடுத்தவர்கள் வியப்பார்கள். திடீர் கோபம் வரும். அதை கட்டுப்படுத்துவது நல்லது. அலைச்சலை தவிர்ப்பதன் மூலம்  களைப்பு ஏற்படாமல் தடுத்து கொள்ள முடியும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும்.  பணவரத்து அதிகரிக்கும். 
 
அவிட்டம் 1,2 பாதம்:
 
இந்த மாதம் வேளை தவறி உணவு உண்ணாமல் பார்த்துக்கொள்வது நல்லது. பண வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில் வியாபாரத்தில்  இருப்பவர்கள் சாதுரியமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். ஆனால் வேலை செய்பவர்களிடம் கோபப்படாமல் தட்டி கொடுத்து  வேலை வாங்குவது நன்மையை தரும்.  ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக  இருப்பீர்கள். 
 
பரிகாரம்: ஸ்ரீநரசிம்ஹ ஸ்வாமியை வணங்க உடல் ஆரோக்கியம் பெறும். மனக்கவலை நீங்கும்.
அதிர்ஷ்டகிழமைகள்: செவ்வாய் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 15; பிப்ரவரி 10, 11
அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ரவரி 3, 4, 5.