தனுசு: தை மாத ராசி பலன்கள் 2020

Dhanusu
(மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்) - கிரகநிலை: ராசியில்  குரு, சனி , கேது -  தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன், புதன் -  தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் -  களத்திர ஸ்தானத்தில் ராஹு - பாக்கிய  ஸ்தானத்தில் சந்திரன் -  அயன, சயன, போக ஸ்தானத்தில்  செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றங்கள்:
 
28-01-2020 அன்று மாலை 3.12 மணிக்கு புதன் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
04-02-2020 அன்று மாலை 6.36 மணிக்கு சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
10-02-2020 அன்று காலை 5.13 மணிக்கு  செவ்வாய் பகவான் ராசிக்கு மாறுகிறார்.
 
பலன்:
 
அனைவரின் நலனிலும் அக்கறை கொண்டுள்ள தனுசு ராசியினரே, இந்த மாதம் எவருக்கும் அவசரப்பட்டு வாக்கு கொடுக்க வேண்டாம். காரிய  தடைகள் நீங்கும். வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்தி தரும். 
 
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். குடும்பத்துடன் வெளியூர் அல்லது ஆன்மீக தலங்களுக்குச் சென்று வருவீர்கள். எல்லோரையும்  அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே  மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நன்மை தரும்.  உறவினர் வகையில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உடல்நலத்தைப் பொறுத்தவரை உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவுகள் வரலாம்.  கவனமுடன் இருக்கவும்.
 
தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அவர்களை தக்க வைத்துக் கொள்ள புதிய  யுக்திகளைக் கையாளுவீர்கள்.
 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு  மனதில் தைரியம் உண்டாகும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வீண்வாக்குவாதத்தை விட்டு நிதானமாக பேசுவது நன்மை தரும்.  புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.    
 
அரசியல் துறையினருக்கு மேலிடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய உக்திகளைக் கையாண்டு மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள். அதனால் முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். 
 
பெண்களுக்கு எந்த காரியத்திலும் நெருக்கடியான நிலை உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படும். பணவரத்து திருப்தி தரும். உடல்நலத்தைப்  பொறுத்தவரை இரத்தம் சம்பந்தமான தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 
மாணவர்கள்  கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு படிக்க முற்படுவீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
 
மூலம்:
 
இந்த மாதம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் இடமாற்றம் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகம் உண்டாகலாம்.  வீண் செலவுகள் கவுரவ குறைச்சல் ஏற்படலாம். மிகவும் கவனம் தேவை. தாய் தந்தையின் உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது. கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். வீண் வாக்குவாதங்களை  தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத  செலவு உண்டாகும்.  உடற்சோர்வு உண்டாகலாம். 
 
பூராடம்:
 
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்பட்டாலும் தேவையான பணவரத்தும் இருக்கும். புதிய முயற்சிகளில் தாமதமான  நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல் காரியங்களில் இழுபறி என்ற நிலையை காண்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள்  விலகும். 
 
உத்திராடம் 1ம் பாதம்:
 
இந்த மாதம் பேச்சை குறைத்து செயலில்  ஈடுபடுவது நன்மையை தரும். குடும்பத்தில் சுமூகமான நிலை காணப்படும். ஆனாலும் மனதில்  குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது  நல்லது. நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பண உதவி வந்து சேரும். எதிலும் கவனம்  தேவை.
 
பரிகாரம்: விநாயகரை அருகம்புல் மாலை போட்டு வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள்.
அதிர்ஷ்டகிழமைகள்: வியாழன் - சனி
சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 8, 9 
அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ரவரி 1, 2.


இதில் மேலும் படிக்கவும் :