வெள்ளி, 5 டிசம்பர் 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 28 நவம்பர் 2025 (17:59 IST)

மலைபோன்ற சிக்கல்களை தீர்க்கும் கரியமாணிக்கப் பெருமாள் திருத்தலம்!

மலைபோன்ற சிக்கல்களை தீர்க்கும் கரியமாணிக்கப் பெருமாள் திருத்தலம்!
வந்தவாசிக்கு அருகே அமைந்துள்ள கீழ்க்கொடுங்காலூர் கிராமத்தின் நடுநாயகமாக, கரியமாணிக்க பெருமாள் கோயில் அமைந்துள்ளது. சோழர் கால பகுதியான வெண்குன்ற கோட்டத்தை ஒட்டிய இந்தக் கோயில் சுமார் 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமை வாய்ந்தது என கருதப்படுகிறது. இது பாண்டியர், பல்லவர், சோழர் ஆகியோரின் ஆட்சி காலங்களில் புனரமைக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக காட்சியளிக்கும் கரியமாணிக்க பெருமாள், இங்கு பிரச்னைகளை தீர்க்கும் சிறந்த பரிகார தலமாக விளங்குகிறார். இத்தல வழிபாட்டின் மூலம் திருமணத் தடைகள், குழந்தை பாக்கியம், சொத்துச் சிக்கல்கள் ஆகியவை நீங்கி மன அமைதி கிட்டும் என பக்தர்கள் நம்புகின்றனர். மலைபோன்ற பிரச்னைகளும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் என்பது இத்தலத்தின் நம்பிக்கை.
 
2007-க்குப் பிறகு, புதியதாக நிர்மாணிக்கப்பட்ட தேசிகர் சந்நிதி மற்றும் முகப்பு மண்டபத்துடன், இந்தக் கோயிலில் டிசம்பர் 1 காலை குடமுழுக்கு நடைபெற உள்ளது.
 
Edited by Mahendran