வெள்ளி, 5 டிசம்பர் 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வியாழன், 27 நவம்பர் 2025 (18:02 IST)

திருப்பதி வைகுண்ட துவார தரிசனம்: 10 நாள் வழிகாட்டுதல்கள் வெளியீடு – சலுகைகள் ரத்து!

திருப்பதி வைகுண்ட துவார தரிசனம்: 10 நாள் வழிகாட்டுதல்கள் வெளியீடு – சலுகைகள் ரத்து!
திருமலை திருப்பதி தேவஸ்தானம் டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை நடைபெறும் 10 நாள் வைகுண்ட துவார தரிசனத்திற்கான விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு, சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, பல சிறப்பு சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 
முதல் 3 நாட்கள் அதாவது டிச. 30 - ஜன. 1 வரை ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் அனுமதிக்கப்படும். நவம்பர் 27 முதல் டிசம்பர் 1 வரை தேவஸ்தான இணையதளம்/செயலி மூலம் பக்தர்கள் பதிவு செய்ய வேண்டும்.
 
மீதமுள்ள 7 நாட்கள் அதாவது ஜன. 2 - ஜன. 8 வரை  சாதாரண பக்தர்கள் டோக்கன்கள் இல்லாமல் நேரடியாக சர்வ தரிசனம் பெறலாம்.
 
ரூ.300 மற்றும் ஸ்ரீவாணி டிக்கெட்டுகள்: ஜனவரி 2 முதல் 8 வரையிலான டிக்கெட்டுகள் டிசம்பர் 5 அன்று ஆன்லைனில் வெளியிடப்படும். 
 
ரத்து செய்யப்பட்ட சலுகைகள்: மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகள் உள்ள பெற்றோர், ஆர்ஜித சேவைகள் மற்றும் பிற பரிந்துரை கடிதங்கள் மூலமான வி.ஐ.பி. தரிசனங்கள் முழுவதும் ரத்து செய்யப்படுகின்றன. 
 
 
Edited by Mahendran