விருச்சிகம்: தை மாத ராசி பலன்கள் 2020

Viruchagam
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) - கிரகநிலை: ராசியில் செவ்வாய் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  குரு, சனி, கேது  - தைரிய ஸ்தானத்தில்  சூர்யன், புதன் -  சுக ஸ்தானத்தில் சுக்ரன் -  அஷ்டம  ஸ்தானத்தில்  ராஹு -  தொழில்  ஸ்தானத்தில்  சந்திரன் என  கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றங்கள்:
 
28-01-2020 அன்று மாலை 3.12 மணிக்கு புதன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
04-02-2020 அன்று மாலை 6.36 மணிக்கு சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
10-02-2020 அன்று காலை 5.13 மணிக்கு  செவ்வாய் பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
 
சிக்கனமாக இருக்க ஆசைப்படும் விருச்சிக ராசியினரே, இந்த மாதம்  மனதில் ஒரு தெளிவு பிறக்கும். ஆனால் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்களைச் சுற்றி உள்ளவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள்.  புதிய நபர்கள் எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் பேசும் போது கவனமாக பேசி பழகுவது நல்லது. விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல்  தவிர்ப்பது நன்மை தரும். 
 
குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள் கொண்டாட்டங்கள் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து  செல்வது நன்மை தரும்.  குழந்தைகள் எதிர்கால நலன்பற்றி சிந்திப்பீர்கள். உங்களது உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.  
 
தொழில் வியாபாரத்தில் பண விவகாரங்களில் கவனம் தேவை. ஆர்டர்கள் கிடைப்பது திட்டமிட்டபடி இல்லை என்றாலும் மதிப்புள்ளதாக அமையும். கவலை வேண்டாம். வேலையாட்களிடம் கண்டிப்புடன் நடந்து கொள்வது அவசியம். 
 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலிடத்தில் பாராட்டு பெறும் வகையில் வேலையில் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக  எதிர்பார்த்திருந்த மாற்றம் கிடைக்கும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை.  வெளியூர் வெளிநாடு செல்ல வேண்டி வரலாம்.
 
அரசியல் துறையினருக்கு மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இதனால்  மனதில் நிம்மதி உண்டாகும்.  நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
 
பெண்கள் எதிலும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது. மனதடுமாற்றம் உண்டாகலாம். செலவு கூடும். மாணவர்கள் கல்விக்கு  தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலை நீங்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும்.
 
விசாகம் 4ம் பாதம்:
 
இந்த மாதம் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம்  கனிவுடன் பேசுவது நல்லது. விருந்தினர் வருகை இருக்கும். பணவரத்தை அதிகப்படுத்தும். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு  முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும்  தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்துநின்று வெற்றிகொள்வீர்கள்.
 
அனுஷம்:
 
இந்த மாதம் துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின் போதும் கவனம் தேவை.  மாணவர்களுக்கு திறமையால் முன்னேற்றம் உண்டாகும். கஷ்டமான பாடங்களையும் துணிச்சலாக படித்து முடிப்பீர்கள். வாகனங்களில்  செல்லும் போது கவனம் தேவை. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரும் வருமானம் தாமதப்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான நிலை இருக்கும்.
 
கேட்டை:
 
இந்த மாதம் குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பண கஷ்டம் குறையும். பக்குவமாக எடுத்து சொல்லி எதிரில் இருப்பவர்களை  திருப்தியடையச் செய்வீர்கள். பல வழிகளிலும் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். ஆனால் எந்த ஒரு வேலையிலும் எச்சரிக்கையுடன்  ஈடுபடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. அலுவலகம் தொடர்பான பணிகள்  தாமதப்படும். 
 
பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் முருகனை வணங்க குடும்ப  பிரச்சனைகள் தீரும். மனகவலை அகலும்.
அதிர்ஷ்டகிழமைகள்: திங்கள் - வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 6, 7
அதிர்ஷ்ட தினங்கள்: ஜனவரி 29, 30, 31.


இதில் மேலும் படிக்கவும் :