செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By

கும்பம்: தை மாத ராசி பலன்கள் 2020

(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்) - கிரகநிலை: ராசியில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ -  களத்திர  ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் குரு, சனி, கேது - அயன, சயன, போக ஸ்தானத்தில்   சூர்யன், புதன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றங்கள்:
 
28-01-2020 அன்று மாலை 3.12 மணிக்கு புதன் பகவான் ராசிக்கு மாறுகிறார். 
04-02-2020 அன்று மாலை 6.36 மணிக்கு சுக்கிர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
10-02-2020 அன்று காலை 5.13 மணிக்கு  செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
 
நியாயத்திற்காக குரல் கொடுக்கும் கும்ப ராசியினரே, இந்த மாதம் மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். எதைச் செய்தால் முன்னேறலாம்  என்று யோசிக்கத் தோன்றும். நிதானமாக சிந்தனை செய்தும், பெரியவர்களின் ஆலோசனை கேட்டும் செயல்பட்டால் பல முக்கிய  முடிவுகளையும், புதிய முதலீடுகளையும் செய்ய வழி பிறக்கும். உங்களின் இந்த பொன்னான காலகட்டத்தை நிதானமாக கையாளுவது  நல்லது. சிறந்ததாகவும் அமையும்.
 
குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.  குடும்ப உறுப்பினருக்காக விருப்பம் இல்லாத காரியத்தில் தலையிட வேண்டி இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இதனால் சிலர்  ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள். உடல்நலம் சீராக இருந்தாலும் இரத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்வது  அவசியம்.
 
தொழில் வியாபாரத்தை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். வியாபார விரிவாக்கம் செய்வது பற்றி அனுபவசாலிகளிடம் ஆலோசனை மேற்கொள்வீர்கள். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரிய அனுகூலம் கிடைக்க பெறுவார்கள். புத்திசாதூரியத்தால் காரிய நன்மை பெறுவார்கள்.
 
கலைத்துறையினர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. சோதனைகள்  வெற்றியாக மாறும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும். 
 
அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும்.  செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும். 
 
பெண்களது செயல்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். நண்பர்கள் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். 
 
மாணவர்களுக்கு பாடங்களை படிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும். ஆசிரியர் மற்றும் சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.
 
அவிட்டம் 3, 4 பாதம்:
 
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். ஆனால் கடுமையான பணியின் காரணமாக  சோர்வு உண்டாகலாம். கவனம் தேவை. குடும்ப விஷயங்களில் ஆர்வம் காண்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி  குறையும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். மேற்படிப்பு படிக்கும் ஆர்வம் உண்டாகும். கல்விக்கு தேவையான உதவிகள்  கிடைக்கும்.
 
சதயம்:
 
இந்த மாதம் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் கவனம் செல்லும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். திடீர்  என்று கோபம் உண்டாவதை தவிர்ப்பது நல்லது. திறமையை கண்டு மற்றவர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். சில  அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். உங்கள் பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும்  தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளித்து ஜெயிக்கலாம்.
 
பூரட்டாதி 1, 2, 3  பாதம்:
 
இந்த மாதம் கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். மாணவர்கள் பாடங்களை நன்கு படித்து  பாராட்டு பெறுவீர்கள். மன குழப்பங்கள் நீங்கும். தைரியம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள்  நன்கு நடந்து முடியும். எடுத்த காரியங்களில்  உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். 
 
பரிகாரம்: சனி பகவானை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்க எல்லா காரியங்களும் வெற்றிபெறும். துன்பங்கள் விலகும்.
அதிர்ஷ்டகிழமைகள்: புதன் - வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 16, 17; பிப்ரவரி 12
அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ரவரி 6, 7.