செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By
Last Updated : சனி, 1 டிசம்பர் 2018 (12:51 IST)

என்ன நம்பி கெட்டவங்க யாருமே இல்ல: வைரலாகும் சிம்பு பட டீசர்!

செக்க சிவந்த வானம் படத்தின் வெற்றிக்கு பிறகு, இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் சிம்பு. 
 
இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடிக்கிறார். அதோடு கேத்ரின் தெரேஸா, ரம்யா கிருஷ்ணன், மஹத், யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கியக் நடிக்கின்றனர். 
 
இந்த படம் பொங்களுக்கு ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படத்தோடு வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 
 
11 மணிக்கு டீசர் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில் சில தொழில்நுட்ப கோளாறுகளால் சற்று தாமதமாக வெளியாகியது. இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். 
 
படத்தின் டீஸர் கண்டிப்பாக ரசிகர்களால் கொண்டாட்ப்படும் ஏனெனில் என்ன நம்பி கெட்டவங்க யாரும் இல்ல.. என்ன நாம்பாம கெட்டவங்க பலர்... போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளது. 
 
இதோ இந்த படத்தின் டீஸர் உங்களுக்காக...