அஜித்தை முந்தும் சிம்பு: நாளை 11 மணிக்கு காத்திருங்கள்...

Last Updated: வெள்ளி, 30 நவம்பர் 2018 (20:45 IST)
செக்க சிவந்த வானம் படத்தின் வெற்றிக்கு பிறகு, இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் சிம்பு. 
 
இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடிக்கிறார். அதோடு கேத்ரின் தெரேஸா, ரம்யா கிருஷ்ணன், மஹத், யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கியக் நடிக்கின்றனர். 
 
இந்த படம் பொங்களுக்கு ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படத்தோடு வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் நாலை 11 மணிக்கு வெளியாகும் என லைகா தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
விஸ்வாசம் படம் படப்பிடிப்பு துவங்கி பல மாதங்கள் ஆகியும் இப்போதுதான் மனசு வந்த மோசன் போஸ்டரை வெளியிட்டனர், ஆனால் அதற்கு டீசர் வரை சென்றுவிட்டார் சிம்பு. 


இதில் மேலும் படிக்கவும் :