திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 28 நவம்பர் 2018 (21:00 IST)

விஜய், விக்ரம், சிம்பு காம்போ? மணிரத்தனம் அடுத்த ப்ளான்!

இயக்குனர் மணிரத்தன் சமீபத்தில் இயக்கிய செக்க சிவந்த வானம் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த படத்தின் கதை குறித்த யோசனையில் இருக்கிறாராம்.
 
செக்க சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா என நட்சத்திர பட்டாளாமே நடித்தாலும் அனைவரின் கதாபாத்திரமும் தனித்துவம் பெற்றிருந்தது. 
 
இந்நிலையில், தனது அடுத்த படத்தையும் பல நடிகர்களின் காம்போவில் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய், விக்ரம், சிம்பு கூட்டணியில் மணிரத்னம் புதிய படத்தை இயக்க உள்ளதாக ஒரு பேச்சு உலவுகிறது. 
 
விக்ரமும், சிம்புவும் ஏற்கனவே மணிரத்னம் படங்களில் நடித்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மணிரத்னம் தனது கனவு படமான பொன்னியின் செல்வன் வரலாற்று கதையை படமாக்க இருப்பதாகவும், அதில்தான் இவர்கள் மூவரும் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.