செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 27 நவம்பர் 2018 (14:30 IST)

'கோலமாவு கோகிலா' இயக்குனரின் தந்தை மறைவு: சிம்பு அஞ்சலி

கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான 'கோலமாவு கோகிலா' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு வசூலையும் அள்ளியது. இயக்குனர் நெல்சன் இயக்கிய முதல் படமான இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அட்டகாசமாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று இயக்குனர் நெல்சனின் தந்தை காலமானார். அவருடைய மறைவிற்கு திரையுலகில் உள்ள பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் நெல்சன் தந்தை மறைவிற்கு நடிகர் சிம்பு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

நெல்சன் இயக்கத்தில் சிம்பு 'வேட்டை மன்னன்' என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது. இந்த படத்தின் டீசர் கூட வெளிவந்து பரபரப்பானது. ஆனால் ஒருசில பிரச்சனைகளால் இந்த படம் கைவிடப்பட்டது. இருப்பினும் நட்பின் அடிப்படையில் நெல்சனின் சோகத்தை சிம்பு பகிர்ந்து கொண்டது அவரது உயர்ந்த உள்ளத்தை காட்டுவதாக அமைந்துள்ளது.