செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : செவ்வாய், 27 நவம்பர் 2018 (21:11 IST)

சிம்புவுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்!

நடிகர் சிம்பு ‘செக்க சிவந்த வானம்’ படத்துக்குப் பிறகு நடித்து வரும் திரைப்படம் ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’. சுந்தர்.சி இயக்கும் இந்தப் படத்தில் சிம்புவுடன் மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா, ரோபோ சங்கர், மஹத் உள்பட பலர் நடித்து வருகிறார்கள்.
 
இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. அண்மையில், நடிகர் சிம்பு தெலுங்கு பட சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபும் சந்தித்து கொண்ட புகைப்படம் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
இது மரியாதை நிமித்தமான சந்திப்பா? அல்லது சிம்புவின் படத்தில் மகேஷ்பாபு கெஸ்ட் ரோல் ஏதாவது நடிக்கிறாரா? என்பது உறுதியாகத் தெரியவில்லை.