1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
  4. ranabaali trailer video is out

விஜய தேவரகொண்டாவின் ரண பாலி!.. ரத்தம் தெறிக்கும் டிரெய்லர் வீடியோ!...

ranabaali
தெலுங்கு சினிமாவில் உள்ள முக்கிய நடிகர்களில் விஜய தேவர கொண்டாவும் ஒருவர். தனது மனைவி ராஷ்மிகாவுடன் இணைந்து ரணபாலி என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ராகுல் சங்கிருதயன் என்பவர் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் டி-சீரிஸ் நிறுவனங்களுடன் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது..

1870 காலகட்டத்தில் ஆந்திராவில் பிரிட்டிஷ் ஆட்சி இருந்த போது அங்கு ஏற்பட்ட பஞ்சத்தின் பின்னணி.. மக்கள் எப்படி ஒடுக்கப்பட்டனர்? அவர்களை ரண பாலி எப்படி காப்பாற்றினார்? என்பதை இந்த படம் பேசுகிறது. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது..

இந்நிலையில், இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் அதிரடியான ஆக்சன் காட்சிகளும் ரண பாலிக்கும், பிரிட்டிஷ்காரர்களுக்கும் இடையே ஏற்படும் மோதல் தொடர்பான காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளது, இந்த படத்தில் ஹாலிவுட படமான Mummy பட நடிகர் அர்னால்ட் வோஸ்லூ இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட 5 மொழிகளில் வருகிற 16ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.



About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
சீன் படத்தின் ’ஆத்தி இவ யார்றா’ பாடல் லிரிக் வீடியோ வெளியீடு!...