1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. abishan jeevinth doing movie with vijayadevarakonda

சூர்யாவும் வேணாம்.. SK-வும் வேணாம்!.. அந்த நடிகரை தேடிப்போன டூரிஸ்ட் பேமிலி இயக்குனர்..

jeevinth
கடந்த சில வருடங்களாகவே அறிமுக நடிகர்கள் மற்றும் அறிமுக இயக்குனர்கள் இயக்கத்தில் வெளியாகும் சின்ன பட்ஜெட் படங்கள் கூட நல்ல கதை அம்சத்தோடு வெளிவந்தால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று நல்ல வசூலையும் பெறுகிறது. அந்த வகையில் அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிக்குமார், சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வெளிவந்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ஒரு சூப்பர் ஃபீல் குட் படமாக அமைந்தது.. அதோடு படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று நல்ல வசூலையும் பெற்றது,,

இந்த படத்திற்கு பின் அபிஷன் ஜீவிந்த் என்ன படம் எடுப்பார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்த நிலையில் அவரோ வித் லவ் என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். இவருக்கு எதற்கு இந்த வேலை என பலரும் என நினைக்கையில் அந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

ஆட்டோகிராப் ஸ்டைலில் அதுவும் ஒரு ஃபீல் குட் படமாக உருவாக்கப்பட்டிருந்தது.
என்னதான் சினிமாவில் நடித்தாலும் அவரின் அறிமுகம் என்பது இயக்கம்தான். எனவே, அடுத்த ஒரு புதிய திரைப்படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார் அபிஷன் ஜீவிந்த். ஏற்கனவே அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சூர்யா, சிவகார்த்திகேயன் இருவரும் ஆர்வம் காட்டியதாக சொல்லப்பட்டது.

ஆனால் அவர்கள் இருவரையும் விட்டுவிட்டு தெலுங்கு நடிகர் விஜய தேவரகொண்டாவை சந்தித்து ஒரு கதையை சொல்லியிருக்கிறார் அபிஷன் ஜீவிந்த். விஜய தேவர கொண்டாவுக்கும் கதை பிடித்துப் போக ‘கண்டிப்பாக பண்ணுவோம்’ என நம்பிக்கை கொடுத்திருக்கிறாராம்..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
என்னுடைய ஒரே கேர்ள் பிரண்ட் தமன்னா தான்.. நடிகை மிருணாள் தாக்கூர்