வியாழன், 12 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 12 பிப்ரவரி 2026 (19:42 IST)

திருமணத்திற்கு தேதி குறித்த ராஷ்மிகா!.. கல்யாணம் எங்க நடக்குது தெரியுமா?..

rashmika
தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. பல இளம் நடிகர்களுக்கு ஜோடியாக இவர் நடித்திருக்கிறார். அதுவும் கடந்த சில வருடங்களாக இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ஆயிரம் கோடி வசூலை தாண்டுகிறது.

புஷ்பா 2, அனிமல் உள்ளிட்ட சில படங்கள் ஆயிரம் கோடி வசூலை தாண்டியது. எனவே இந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக ராஷ்மிகா மாறியுள்ளார். தமிழில் விஜயுடன் வாரிசு, கார்த்தியுடன் சுல்தான், தனுசுடன் குபேரா போன்ற படங்களில் நடித்திருக்கிறார்..

கடந்த சில வருடங்களாகவே நடிகர் விஜய தேவரகொண்டாவை காதலித்து வருகிறார் ராஷ்மிகா. சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்தது. இந்நிலையில் வருகிற 26ம் தேதி இவர்களின் திருமணம் ஜெய்ப்பூரில் நடக்கவிருக்கிறதாம்.

அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது.. இதையடுத்து திரைப் பிரபலங்கள் பலரும் ராஷ்மிகாவுக்கும்,. விஜய தேவரகொண்டாவுக்கும் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.