வியாழன், 12 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 13 பிப்ரவரி 2026 (21:33 IST)

விலைக்கு கேட்ட நெட்பிளிக்ஸ்!.. No சொன்ன ராஷ்மிகா - விஜய தேவரகொண்டா!..

rashmika
தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வரும் வருபவர் ராஷ்மிகா மந்தனா அதேபோல் தெலுங்கில் பிரபல நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவர்கள் இருவரும் இணைந்து கீதா கோவிந்தம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தனர்.

அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது. அதேநேரம் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறோம் என அவர்கள் எங்கும் வெளியே சொல்லவில்லை. ஆனாலும் விஷயம் வெளியே கசிந்துவிட்டது.

இந்நிலையில்தான், இவர்களின் திருமணம் வருகிற 26ம் தேதி ஜெய்ப்பூரில் விமர்சையாக நடக்கவுள்ளது. திருமண விழா இரண்டு மூன்று நாட்கள் நடக்கும் என சொல்லப்படுகிறது. இதையடுத்து தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்
.
திருமண நிகழ்வுகளை ஆவணப்படவுமாக எடுக்க Netflick நிறுவனம் விஜய தேவரகொண்டாவை அணுகியிருக்கிறது. நெட்பிளிக்ஸ் நிறுவனம் 60 கோடி கொடுக்க முன்வந்தும் ‘திருமண நிகழ்வுகள் விலைமதிப்பற்றவை.. அது எங்களால் விற்க முடியாது’ என சொல்லி விஜயதேவர கொண்ட்அ மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது..

சமீபகாலமாகவே திரை பிரபலங்கள் தங்களுக்கு திருமணம் செய்து கொள்ளும்போது அதை அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி நிறுவனங்களிடம் ஒரு விலை பேசி விற்று விடுகிறார்கள்.. துவக்கம் முதல் கடைசி வரை திருமண நிகழ்வுகளை படமெடுத்து அதை ஓடிடியில் வெளியிட்டு அந்த நிறுவனங்கள் பணம் சம்பாதிப்பது குறிப்பிடத்தக்கது..