வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (12:25 IST)

அசுர வேட்டை விரைவில் – வெளியானது அசுரன் போஸ்டர் !

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் நான்காவது படமான அசுரனின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

வடசென்னை  படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும்  அசுரன்  படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படம் வெக்கை என்ற நாவலிலிருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் கோவில்பட்டி சுற்றுவட்டாரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் தனுஷுடன், மஞ்சு வாரியர், பசுபதி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். விரைவில் ரிலிஸாக உள்ள இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று இப்போது வெளியாகி சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

கிட்டதட்ட படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ள இப்படம் ஆகஸ்டு மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.