1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 4 ஜூன் 2019 (14:53 IST)

கோவிலுக்கு இப்படியா போவ! ஜூலியின் புகைப்படத்தை கண்டந்துண்டமாக்கிய நெட்டிசன்ஸ்!

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார். முதல்  சீசன் முடிந்து இரண்டாவது சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை நெட்டிசன்கள்.


 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் அரங்கேற்றிய பல நாடகத்தால் இவருக்கு பல ஹீட்டர்ஸ்கள் உருவாகிறார்கள். இவரைப் பற்றிய எந்த செய்திகள் வந்தாலும் இவரை சமூகவலைதளத்தில் வறுத்து எடுத்து வந்தாலும் . ஆனால், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ரியாலிட்டி ஷோ, சினிமா என்று பிஸியாக இருந்து வருகிறார் ஜூலி. அவர்  உண்டு அவர் வேலை உண்டு என்று இருந்தாலும் நெட்டிசன்கள் அவரை விடுவதாக இல்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மரண கலாய்  கலாய்க்கிறார்கள்.
 
இதனால் ஆத்திரமடைந்த ஜூலி ‘நான் என்ன தவறு செய்தேன் எதற்காக இப்படி திட்டுகிறீர்கள்’ என்று ஒரு வீடியோ ஒன்றை கூட வெளியிட்டு இருந்தார் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதன் பின்னர் கூட ஜூலியை கிண்டலப்பதை மட்டும் ரசிகர்கள் நிறுத்தியபாடில்லை. 


 
இந்த நிலையில் தற்போது ஜூலி கோவிலுக்கு சென்ற புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதனை கண்ட ரசிகர்கள் கோவிலுக்கு போகும்போது ஷூட்டிங்  போகுறமாதிரி மேக்கப்  தேவையா என கூறி மோசமாக கலாய்த்து வருகின்றனர்.