'விஸ்வாசம்' படத்துடன் கனெக்சன் ஆகும் தனுஷின் அடுத்த 2 படங்கள்!

Last Modified திங்கள், 3 ஜூன் 2019 (19:49 IST)
தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' படத்துடன் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனையடுத்து அதே உற்சாகத்துடன் இந்த படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம், தனுஷின் அடுத்த இரண்டு படங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்தது.
இதில் முதல் படத்தை இயக்குனர் துரைசெந்தில்குமார் இயக்கி வருகிறார். தனுஷ் ஜோடியாக சினேகா நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது தனுஷ் நடிப்பில் சத்யஜோதி தயாரிக்கும் இரண்டாவது படம் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த படத்தை சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'ராட்சசன்' படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது
தனுஷ் ஏற்கனவே வெற்றிமாறனின் 'அசுரன்' மற்றும் கவுதம் மேனைன் 'எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் நடித்த ஹாலிவுட் படமான 'பக்கிரி' திரைப்படம் இம்மாதம் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :