1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 24 ஜூலை 2023 (22:57 IST)

அஜித்தின் ''விடாமுயற்சி'' ஷூட்டிங் எப்போது? வெளியாகும் தகவல்

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தொடக்கம் பற்றிய தகவல் வெளியாகிறது.
 

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர்  அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, நடிகர் அஜித் தன்  62ஆவது படமான விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார்.

விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட் பற்றிய தகவலை இயக்குநர் மகிழ்திருமேனி தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அதன்படி, வரும் ஆகஸ்ட் மாதம் 3  ஆம் தேதி விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.