வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 24 ஜூலை 2023 (18:39 IST)

''இப்படியும் ஒரு மனிதர் இருக்க முடியுமா''- விஜய் ஆண்டனி பற்றி பிரபல இயக்குநர் டுவீட்

vijay antony - naveen
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிர்  விஜய் ஆண்டனி. இவர்  நான், அண்ணாத்துரை, திமிரு பிடிச்சவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் நடித்து, இயக்கி, தயாரித்திருந்த படம் பிச்சைக்காரன் 2. இப்படம்  ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து,  இவரது நடிப்பில்  கடந்த 21 ஆம் தேதி ரிலீஸான கொலை படமும் திரையரங்குகளில் ஓடி வருகிறது. இன்று இவர் தன் 48 வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இவரது பிறந்த நாளுக்கு சினிமா பிரபலங்கள்,  ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

இந்த  நிலையில், பிரபல நடிகரும் இயக்குநருமான நவீன் தன் டுவிட்டர் பக்கத்தில், ''இப்படியும் ஒரு மனிதர் இருக்க முடியுமா என்று வெகுசில மனிதர்களை மட்டுமே நாம் கண்டு வியக்க முடியும். அப்படி ஒரு மனிதருக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்❤️❤️❤️
Luv u தோழர் விஜய் ஆண்டனி… விரைவில் 2 ‘’என்று பதிவிட்டுள்ளார்.