அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!
நடிகர் அஜித் குமார் தற்போது தனது அடுத்த திரைப்படமான 'ஏகே 64' பணிகளுக்கு இடையே, தான் பெரிதும் விரும்பும் கார் பந்தய பயிற்சிக்காக மலேசியாவில் இருக்கிறார்.
இந்த சூழலில், அஜித்துடன் 'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்', 'விஸ்வாசம்' ஆகிய நான்கு படங்களில் பணியாற்றிய இயக்குநர் சிவா, கடந்த சில நாட்களாக மலேசியாவில் அஜித்துடன் நேரத்தை செலவிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவாவின் சமீபத்திய 'கங்குவா' திரைப்படம் பெரிய வெற்றியை பெறாத நிலையில், அவர் புதிய படங்களுக்கு ஒப்பந்தம் ஆகாமல் இருக்கிறார்.
இந்த நிலையில் மலேசியாவில் இந்த இருவரின் சந்திப்பு, மீண்டும் அஜித்தை வைத்து ஒரு புதிய படத்தை தொடங்க சிவாவுக்கு அஜித் சம்மதம் அளித்திருக்கலாம் என்ற யூகங்களை வலுப்படுத்தியுள்ளது.
அஜித் - சிவா கூட்டணி ஐந்தாவது முறையாக இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகின்றன.
Edited by Mahendran