சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?
நீண்ட காலமாக டிஜிட்டல் விற்பனையில் சிக்கித் தவித்த 'கருப்பு' திரைப்படம் குறித்து ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இறுதியாக, இந்த படத்தின் ஓடிடி உரிமம் ஒரு பெரிய நிறுவனத்திற்கு விற்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இருப்பினும், அதை வாங்கிய நிறுவனத்தின் பெயர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து, படக்குழுவினர் தற்போது திரையரங்க வெளியீட்டுக்குத் தயாராகி வருவதாக தெரிகிறது. அதன்படி, 'கருப்பு' திரைப்படத்தை ஜனவரி 23ஆம் தேதி வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
ஆனால், பட தயாரிப்பாளர்கள் திரையரங்கு உரிமையாளர்களிடம், "நாங்கள் அறிவுறுத்தும் வரை வேறு திரையரங்குகளை ஒப்பந்தம் செய்ய வேண்டாம்" என்று நிபந்தனை விதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி மாதத்தில் 'பராசக்தி' மற்றும் 'ஜனநாயகன்' போன்ற மற்ற பெரிய படங்களும் வெளியாகும் வாய்ப்பு இருப்பதால், 'கருப்பு' படத்திற்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் நிலவலாம் என்றும் கூறப்படுகிறது.
Edited by Siva