வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 30 ஆகஸ்ட் 2017 (16:36 IST)

இயக்குனர் அவதாரம் எடுக்கும் பாடலாசிரியர் அருண் ராஜா காமராஜ்

அருண் ராஜா காமராஜ் தமிழ் திரைப்பட, நடிகர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் சில பாடல்களை எழுதியும்  பாடியும் உள்ளார். மேலும், ராஜா ராணி திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திரமாக வந்தாலும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.

 
தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட பாடலாசிரியர்கள் மிக குறிகிய காலத்தில் விரைவில் ஒரு பெரிய இடத்தை பிடித்தவர் பிரபல பாடலாசிரியர் அருண் காமராஜ். தற்போது இவர் இயக்குனர் அவதாரம் எடுக்கப்போகிறாராம்.
 
கபாலி படத்தில் ‘நெருப்புடா’ என்ற பாடலை எழுதிப் பாடிய அருண்ராஜ் காமராஜ், விரைவில் இயக்குநராக அறிமுகமாக  இருக்கிறார். இவர் நடிகராக மட்டுமின்றி, பாடலாசிரியர் மற்றும் பாடகராக அறியப்படுபவர். இவர் ‘ராஜா ராணி’, ‘மரகத  நாணயம்‘ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர், சில பல பாடல்களையும் எழுதியும், பாடியும் உள்ளார். 
 
சமீபத்தில் மகளிர் உலகப்கோப்பை போட்டியில் இறுதிப்போட்டி வரை சென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை கௌரவப்படுத்தும் வகையில் படம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மற்றபடி படத்தை பற்றிய முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இதனால் தகவலை அறிந்த பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.