செவ்வாய், 11 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam

நாளை முதல் ராஜபார்வை: இயக்குனர் ஷங்கர் கூறுவது எதை தெரியுமா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வந்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



 
 
இந்த நிலையில் ஷங்கர் தயாரிப்பில் 'இம்சை அரசன் 2ஆம் புலிகேசி' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக கடந்த சில மாதங்களாக வெளிவந்து கொண்டிருந்தது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளும் தொடங்கிவிட்டதாக கடந்த சில வாரங்களாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில் நாளைமுதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக ஷங்கர் அறிவித்துள்ளார் சற்றுமுன்னர் அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், 'ராஜாதி ராஜ....ராஜ மார்த்தாண்ட...ராஜ கம்பீர...ராஜகுல திலக...ராஜ குலோத்துங்க...ராஜ பாராக்கிரம...ராஜ வைராக்ய..மாமன்னர் பராக் பராக் பராக்... நாளை முதல் 'ராஜ பார்வை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து இந்த படத்தின் தலைப்பு 'ராஜபார்வை' என்று இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
சிம்பு இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் உருவாகும் இந்த படத்தில் முன்னணி நடிகைகள் உள்பட பலர் நடிக்கவுள்ளனர்.