1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 5 ஏப்ரல் 2025 (13:09 IST)

ஜி வி பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

2013 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ், தனது பள்ளிகால தோழியும் பாடகியுமான சைந்தவியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குக் கடந்த 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இப்படி தமிழ் சினிமாவின் நட்சத்திரத் தம்பதிகளாக இருந்த இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷும், பாடகி சைந்தவியும் விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தனர்

இவர்களின் விவாகரத்துக்குக் காரணம் ஜி வி பிரகாஷ் நடிகை திவ்யபாரதியைக் காதலிப்பதுதான் என்றொரு தகவல் இப்போது வரை பரவி வருகின்றது. அதன் உண்மைத்தன்மை இதுவரை யாருக்கும் தெரியாது. ஆனால் விவாகரத்து அறிவித்த பின்னரும் ஜி வி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் ஒன்றாக இணைந்து இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

கடந்த மாதம் இருவரும் விவாகரத்து வழக்குக்கு ஒரே காரில் வந்த அவர்கள் நீதிமன்றத்தில் பிரிந்து வாழ சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் நடந்தது. அப்போது இருவரும் செப்டம்பர் 25 ஆம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.