வெள்ளி, 11 ஏப்ரல் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 5 ஏப்ரல் 2025 (13:05 IST)

மகனுக்காகக் கைவிட்ட வன்முறையை அதே மகனுக்காகக் கையில் எடுக்கும் AK..இதுதான் GBU கதையா?

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ இம்மாதம் 10 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் த்ரிஷா ,சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவை படத்தின் மீது எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தன.

இந்நிலையில் நேற்றிரவு இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. டிரைலரில் அஜித்தின் முந்தைய படங்களான அமர்க்களம், தீனா, பில்லா, மங்காத்தா ஆகியவற்றின் ரெஃப்ரன்ஸ்கள் இடம்பெற்று ரசிகர்களை குஷி மோட்-க்கு கொண்டு சென்றுள்ளது.

இந்நிலையில் டிரைலரில் இடம்பெற்ற சிலக் காட்சிகள் மற்றும் வசனங்களை வைத்து படத்தின் கதை என்னவாக இருக்கும் என ரசிகர்கள் டிகோட் செய்து வருகின்றனர். அந்த வகையில் “ஒரு காலத்தில் கேங்ஸ்டராக இருந்து தன்னுடைய மகனுக்காக திருந்தி வாழும் AK, திரும்பி அதே மகனுக்கு ஒரு சூழ்நிலை வரும் பொது மீண்டும் வன்முறையைக் கையில் எடுப்பதுதான் கதையாக இருக்கும்” எனக்  கூறி வருகின்றனர்.